ஸ்கூட்டியில் இளைஞர் செய்த விபரீத சேட்டை! அலறி அடித்து ஓடிய பொதுமக்கள், வைரல் வீடியோவால் சர்ச்சை

ஸ்கூட்டியில் இளைஞர் செய்த விபரீத சேட்டை! அலறி அடித்து ஓடிய பொதுமக்கள், வைரல் வீடியோவால் சர்ச்சை

சமூக வலைதளங்களில் ‘லைக்ஸ்’ மற்றும் ‘வியூஸ்’ பெறுவதற்காக பலர் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், ஸ்கூட்டியில் சென்ற ஒரு ஜோடி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டனர். ஸ்கூட்டி ஓட்டும் பெண்ணின் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் திடீரென, “வழியிலிருந்து விலகுங்கள்! இவருக்கு ஸ்கூட்டி ஓட்டத் தெரியாது!” என்று சத்தமாக கத்தினார். இதைக் கேட்ட பொதுமக்கள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர்.

View this post on Instagram

A post shared by GURU BAL 💎 (@guru_bal)

இந்தச் செயல் ஒரு வேடிக்கைக்காக செய்யப்பட்டது என்றாலும், அது பொதுமக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதனால் ஒரு பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பிருந்ததாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். வெறும் ‘வியூஸ்’ மற்றும் ‘லைக்ஸ்’ க்காக பொதுமக்களின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவது தவறானது என்று பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *