விஜய் உள்ளிட்ட 234 வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் பி.டி. செல்வகுமார் கடும் சாடல்

விஜய் உள்ளிட்ட 234 வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் பி.டி. செல்வகுமார் கடும் சாடல்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது அரசியல் நகர்வுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் உட்பட தவெக வேட்பாளர்கள் அனைவரும் அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பார்கள் என்று அவர் சவால் விடுத்துள்ளார். விஜய்யை நம்பி இளைஞர்கள் சீரழிவதாகவும், தவெக-விற்கு எதிராகத் தான் நேரடியாகப் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் அவர் நெல்லையில் தெரிவித்தார்.

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விவாகரத்து விவகாரம் குறித்தும் செல்வகுமார் அதிரடி கருத்துகளை முன்வைத்தார். விஜய்யின் மனைவி சங்கீதா ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும், உரிய நேரத்தில் அவரே அனைத்து ஆதாரங்களையும் வெளியிடுவார் என்றும் கூறினார். நடிகை ஒருவரால் விஜய்யின் வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அரசியல் மற்றும் தனிப்பட்ட ரீதியாக விஜய்க்கு எதிராகப் பல்வேறு புகார்களை அடுக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *