வாழைப்பழத் தோலின் அற்புதம்! முகப்பரு, மஞ்சள் நிற பற்கள், கருவளையங்களுக்கு இப்படி தீர்வு காணலாம்

வாழைப்பழத் தோலின் அற்புதம்! முகப்பரு, மஞ்சள் நிற பற்கள், கருவளையங்களுக்கு இப்படி தீர்வு காணலாம்

பொதுவாக, வாழைப்பழத்தை சாப்பிட்ட பின் அதன் தோலை நாம் தூக்கி எறிந்துவிடுகிறோம். ஆனால் வாழைப்பழத் தோலில் பல மருத்துவ குணங்கள் உள்ளன என்பது பலருக்குத் தெரியாது. பற்களின் மஞ்சள் கறைகள், முகப்பரு மற்றும் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் போன்ற பல பிரச்சனைகளுக்கு வாழைப்பழத் தோல் ஒரு சிறந்த இயற்கை தீர்வாக அமைகிறது.

பற்களை வெண்மையாக்கி பளபளப்பாக்க, வாழைப்பழத் தோலின் உள்பக்கத்தைக் கொண்டு பற்களைத் தேய்க்கலாம். முகப்பரு பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பழத் தோலின் உட்புறத்தை தினமும் முகப்பரு மீது தடவலாம். இதேபோல், கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களையும் குறைக்க இது பயன்படுகிறது. மேலும், வாழைப்பழத் தோலை இரவு முழுவதும் தோலில் கட்டி வைத்தால், தோல் மென்மையாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *