வான்கடே மைதான ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹர்திக் பாண்டியா
March 27, 2026

டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு உதவிய வான்கடே மைதான ஊழியர்களுக்கு கொடுத்த வாக்கை ஹர்திக் பாண்டியா நிறைவேற்றியுள்ளார். நள்ளிரவு வரை தனது பயிற்சிக்கு உதவிய ஊழியர்களை நேரில் சந்தித்து, தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார். மும்பை இந்தியன்ஸ் கேப்டனின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மைதான ஊழியர்கள் மட்டுமின்றி, சக வீரர்களிடமும் அவர் காட்டும் அன்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்காத ஜித்தேஷ் சர்மாவுக்கு முதலில் குறுஞ்செய்தி அனுப்பி ஹர்திக் ஆறுதல் கூறியுள்ளார். இக்கட்டான நேரங்களில் மற்றவர்களுக்கு உதவும் அவரது குணம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.