மோடியின் முக்கிய கூட்டத்தில் மம்தா ஸ்டாலின் பங்கேற்காதது ஏன் பின்னணி என்ன
March 27, 2026

மேற்கு ஆசியப் போர் பதற்றங்களுக்கு மத்தியில் எரிசக்தி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை ஆய்வு செய்ய பிரதமர் மோடி இன்று மாநில முதலமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மு.க.ஸ்டாலின் மற்றும் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு அமைச்சரவை செயலகம் மூலம் தனியாக ஆலோசனைகள் நடத்தப்படும். நாட்டில் போதிய எரிபொருள் இருப்பு உள்ளதாகவும், ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.