பெரம்பூரில் விஜய்யின் தேர்தல் பிரசாரத்திற்கு காவல்துறை அதிரடி தடை

பெரம்பூரில் விஜய்யின் தேர்தல் பிரசாரத்திற்கு காவல்துறை அதிரடி தடை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நாளை பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளவிருந்த பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. எம்.கே.பி நகர் பகுதியில் அதிகப்படியான கூட்டம் கூடினால் அசம்பாவிதம் ஏற்படும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்று இடத்தை தேர்வு செய்யுமாறு தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே காலதாமதமாக விண்ணப்பித்ததால் நுங்கம்பாக்கத்தில் நடைபெறவிருந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. தேர்தல் விதிமுறைப்படி 48 மணி நேரத்திற்கு முன்பே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் விஜய்யின் தேர்தல் பிரசாரத் தொடக்கத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *