புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவியை விவாகரத்து செய்த கணவன், வங்கிக் கணக்கை காலி செய்த அவலம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவியின் வங்கிக் கணக்கை காலி செய்துவிட்டு கணவன் விவாகரத்து செய்த சம்பவம் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேரி என்ற பெண் ரெடிட் தளத்தில் இந்த மனதை உருக வைக்கும் சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். மேரிக்கு மூளைக் கட்டி இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, அவரது கணவர் இருவரின் வங்கிக் கணக்கிலிருந்த அனைத்துப் பணத்தையும் எடுத்துக்கொண்டு, ஒரு செய்தியை அனுப்பி விவாகரத்து செய்வதாகத் தெரிவித்தார்.
அந்தச் செய்தியில், மேரி இறப்பதைப் பார்க்க முடியாது என்றும், அவரது சிகிச்சைக்கு நிறைய செலவழித்ததாகவும், அதனால் தனது எதிர்காலத்திற்காகப் பணத்தை எடுத்துக்கொண்டதாகவும் கணவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் மனித உறவுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், கணவனின் இந்தக் கொடூரச் செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.