புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் அதிரடி திருப்பம் கூட்டணிக் கட்சிகளிடையே மோதல்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 16 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் வெளியிட்டுள்ளார். இதில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சமீபத்தில் கட்சியில் இணைந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மண்ணாடிப்பட்டு தொகுதியில் டி.பி.ஆர். செல்வமும், ஏனாம் தொகுதியில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கும் களம் காண்கின்றனர்.
திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் மனுக்களை வாபஸ் பெறாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 22 இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுவது திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி உருவாகும் சூழல் நிலவுகிறது.