புதிய தமிழகம் தனித்து போட்டி கிருஷ்ணசாமியின் அதிரடி முடிவால் தமிழக அரசியலில் பரபரப்பு
March 27, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடும் என டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறி மற்றும் உரிய அரசியல் அங்கீகாரம் வழங்கப்படாததே இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. தங்களைப் புறக்கணிப்பவர்களைத் தேர்தலின் மூலம் புறக்கணிப்போம் என அவர் தனது அறிக்கையில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
கட்சி வலுவாக உள்ள 120 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ள 60 முதல் 70 தொகுதிகளைத் தேர்வு செய்து, மார்ச் 29 அன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட கிருஷ்ணசாமி திட்டமிட்டுள்ளார். தென் தமிழகத்தில் கணிசமான வாக்கு வங்கி கொண்ட புதிய தமிழகம் கட்சியின் இந்தத் தனிப்பார்வை, பிரதான கூட்டணிகளின் வெற்றி வாய்ப்பில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.