புதினுக்கு டிரம்ப் போட்ட ரகசிய போன் கால் உலகரங்கில் பரபரப்பு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் புதினை டிரம்ப் அவசரமாகத் தொடர்பு கொண்டு பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் புதிய தலைவருக்கு புதின் ஆதரவு தெரிவித்த சில மணிநேரங்களிலேயே இந்த ‘மிஸ்டரி’ கால் நிகழ்ந்துள்ளது. இந்தப் போரிலிருந்து அமெரிக்கா கௌரவமாக வெளியேற புதினின் உதவியை டிரம்ப் நாடுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கடந்த பத்து நாட்களில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் கடும் மாற்றங்கள் தென்படுகின்றன. ஆட்சி மாற்றத்தை இலக்காகக் கொண்ட டிரம்ப், தற்போது பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்துள்ளார். ஈரான் தனது பிடிவாதமான போக்கைக் கைவிடாத நிலையில், ரஷ்யாவை ஒரு மத்தியஸ்தராகப் பயன்படுத்தி போர் நிறுத்தத்தைக் கொண்டுவர அமெரிக்கா முயற்சிக்கிறது. புதினின் அடுத்தகட்ட நகர்வே இந்தப் போரின் போக்கை தீர்மானிக்கும்.