பிரதமர் மோடியின் பிறந்தநாள்: குஜராத்தில் 56,000 யூனிட் ரத்தம் தானம் செய்து உலக சாதனை
September 17, 2025

பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளையொட்டி, குஜராத்தில் “நமோ கே நாம்” என்ற சிறப்பு ரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முயற்சியில், ஒரே நாளில் 56,265 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. ஒரு அரசியல் தலைவரின் பிறந்தநாளுக்காக அரசு ஊழியர்களால் இவ்வளவு பெரிய அளவில் ரத்ததானம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
மாநில அரசு தகவலின்படி, குஜராத் முழுவதும் 378 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டன, இதில் 56,265 பேர் ரத்தம் தானம் செய்தனர். முதல்வர் பூபேந்திர படேல் ரத்தம் தானம் செய்தவர்களைப் பாராட்டி, இந்த சாதனையை மனிதநேயம் மற்றும் தேசிய உணர்வுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று கூறினார். உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி, இந்த சாதனையை ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று வர்ணித்தார்.