பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் மீண்டும் வெடித்த போர் மற்றும் முறிந்தது அமைதி பேச்சுவார்த்தை
March 27, 2026

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே தற்காலிக போர்நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து மீண்டும் மோதல் வெடித்துள்ளது. பயங்கரவாதம் ஒழிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்லாமாபாத் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இது பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சினை என்று காபூல் தெரிவித்துள்ளது. எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதால் இரு நாடுகளுக்கிடையிலான உறவு மீண்டும் சிக்கலாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை காபூலில் 60 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. சர்வதேச நாடுகளின் சமாதான முயற்சிகளுக்கு மத்தியிலும் இந்த மோதல் மற்றும் உயிரிழப்புகள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.