பருவநிலை மாற்றத்தால் ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துகிறதா? மாத்திரைகளைத் தவிர்த்து இந்த எளிய பழக்கங்களால் தீர்வு காணுங்கள்

பருவநிலை மாற்றத்தால் ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துகிறதா? மாத்திரைகளைத் தவிர்த்து இந்த எளிய பழக்கங்களால் தீர்வு காணுங்கள்

செய்தி பிரிவு : வேலையின் இடையில் திடீரென தலை ஒருபுறம் வலிக்கத் தொடங்கினால் அன்றைய பொழுதே வீணாகிவிடும். குறிப்பாகப் பருவநிலை மாறும் காலங்களில் ஒற்றைத் தலைவலியால் (Migraine) சாமானிய மக்கள் படும் அவதி சொல்லொணாதது. அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்வது பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்பதால், அன்றாடப் பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களைச் செய்வதே இதற்குச் சரியான தீர்வாகும்.

தொடர்ந்து கணினித் திரையைப் பார்ப்பதைத் தவிர்த்து அவ்வப்போது இடைவேளை எடுப்பதும், ஆழ்ந்த உறக்கமும் தலைவலியை வெகுவாகக் குறைக்கும். வெறும் வயிற்றுடன் இருப்பது அமிலத்தன்மையை உண்டாக்கி வலியைத் தூண்டும் என்பதால் சரியான நேரத்திற்குச் சத்தான உணவுகளை உண்ணுங்கள். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதுடன், அதிக சர்க்கரை சேர்த்த உணவுகளைத் தவிர்த்தால் ஒற்றைத் தலைவலியிலிருந்து நீங்கள் எளிதாக விடுபடலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *