நிலவு, செவ்வாய்க்கு கூட்டாக பயணிக்கும் இந்தியா-அமெரிக்கா

விண்வெளி ஆராய்ச்சியில் நாசா மற்றும் இஸ்ரோவுக்கு இடையே உள்ள நீண்டகால ஒத்துழைப்பு, நிலவு மற்றும் செவ்வாய்க்கு கூட்டுப் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் புதிய உச்சத்தை எட்டவுள்ளது. வாஷிங்டன் டி.சி.யில் நடந்த ஒரு நிகழ்வில், விண்வெளி வீரர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்தத் திட்டங்களை கோடிட்டுக் காட்டினர். இந்தத் திட்டம் அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வணிக ஒத்துழைப்புக்கான ஒரு தளமாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவிற்கான இந்திய தூதர் வினய் குவாத்ரா, இந்த கூட்டு முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார். குறைந்த செலவில் விண்வெளி பயணங்களில் இந்தியாவின் வெற்றியும், அமெரிக்காவின் தொழில்நுட்ப நிபுணத்துவமும் புதிய திசையை உருவாக்கும் என்றார். நாசாவின் புவி அறிவியல் பிரிவின் இயக்குனர் டாக்டர் கரேன் செயின்ட் ஜெர்மெயின்-னும், இந்த கூட்டாண்மை இரு நாடுகளின் விண்வெளி திட்டங்களை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.