நிலத்தகராறில் தாயைக் கொன்றுவிட்டு மகன் தற்கொலை; மஹாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்

நிலத்தகராறில் தாயைக் கொன்றுவிட்டு மகன் தற்கொலை; மஹாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்

மகாராஷ்டிராவின் லத்தூரில் நில தகராறு காரணமாக ஒரு மகன் தனது தாயைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயதான தாய் நிலத்தை விற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த மகன் இந்தக் கொடூரச் செயலைச் செய்துள்ளார். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை வெளிச்சத்துக்கு வந்த நிலையில், இறந்த மகன் காக்காசாகேப் ஜாதவ் மீது வெள்ளிக்கிழமை கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணையில், காக்காசாகேப் தனது தாயிடம் நிலத்தை விற்குமாறு கேட்டதாகவும், ஆனால் அவரது தாய் அதற்கு மறுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த காக்காசாகேப் தனது தாயை கடுமையாகத் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். பின்னர் உடலை கரும்புத் தோட்டத்தில் புதைத்த அவர், சில மணி நேரத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *