தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் இன்று மாலை வெளியாகிறது

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் இன்று மாலை வெளியாகிறது

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது. டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்கள் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளனர். வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த மாநிலங்களின் ஆட்சிக்காலம் முடிவடைவதால் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

கடந்த 2021 தேர்தலில் மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது, ஆனால் இம்முறை கட்டங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும். அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் இந்த முக்கிய அறிவிப்பை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *