சீரடி சாய் பாபா கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய இன்று இரவு முழுவதும் நடை திறப்பு

சீரடி சாய் பாபா கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய இன்று இரவு முழுவதும் நடை திறப்பு

ஸ்ரீராம நவமி மற்றும் சாய் பாபாவின் அவதாரத் திருநாளை முன்னிட்டு சீரடியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இந்த விசேஷ தினத்தை ஒட்டி கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. வழக்கமாக இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும் நிலையில், பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க இன்று இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்துள்ள பக்தர்கள் பாபாவின் அருளைப் பெற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக சீரடி சாய் பாபா அறக்கட்டளை இந்த சிறப்பு ஏற்பாட்டைச் செய்துள்ளது. இரவு ஆர்த்திக்குப் பிறகும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதால் சீரடி தலம் பக்திப் பரவசத்தில் மூழ்கியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *