சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் எடை குறையாமல் இருக்க இதுதான் முக்கிய காரணமாகும்

சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமாக இருக்க உடல் எடையை கட்டுப்படுத்துவது அவசியம் என்றாலும் இன்சுலின் எதிர்ப்புத் திறன் காரணமாக கொழுப்பை குறைப்பது கடினமாகிறது. உடலில் இன்சுலின் அளவு அதிகமாக இருந்தால் அது கொழுப்பு எரிவதைத் தடுத்து உடலில் கூடுதல் எடையைச் சேர்க்கிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி இந்த சிக்கலான உடல் மாற்றமே கடுமையான முயற்சிக்கு பிறகும் எடை குறையாமல் இருக்க காரணமாகிறது.
சர்க்கரை நோய்க்கான சில மருந்துகள் மற்றும் இன்சுலின் ஊசிகளின் பக்கவிளைவுகளால் சிலருக்கு உடல் எடை அதிகரிக்கலாம். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் போது அடிக்கடி பசி எடுப்பதால் கலோரி கட்டுப்பாட்டை பின்பற்றுவது கடினமாகிறது. இந்தப் பிரச்னையைத் தவிர்க்க மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளின் அளவைச் சரிசெய்து சரியான கார்போஹைட்ரேட் உணவுகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமாகும்.