கொரோனா பாதிப்பு தீவிரமடைய மரபணு குறைபாடே முக்கிய காரணம் என மருத்துவர்கள் வெளியிட்ட அதிரடி தகவல்

கொல்கத்தாவில் நடைபெற்ற நோய் எதிர்ப்பு சக்தி குறித்த மாநாட்டில் கொரோனா பாதிப்பு சிலருக்கு உயிருக்கு ஆபத்தானதாக மாறியதற்குக் காரணம் அவர்களின் மரபணு குறைபாடே என்று மருத்துவர்கள் விளக்கமளித்தனர். உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மரபணுக்களில் பிறப்பிலேயே குறைபாடு இருக்கும்போது வைரஸ் தாக்குதலை உடல் உணரத் தாமதிக்கிறது. இதனால் சாதாரணத் தொற்று கூட உயிருக்கே சவாலாக மாறிவிடுகிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகளுக்குத் தொடர்ச்சியான தொற்று அல்லது காசநோய் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது மரபணு நோயாக இருக்க வாய்ப்புள்ளது. ஆன்டிபயாடிக் மருந்துகள் பலனளிக்காத பட்சத்தில் மரபணு பரிசோதனை செய்வது அவசியம் என்று டாக்டர் பிரியங்கர் பால் மற்றும் டாக்டர் ஜிக்னா பாட்டியா அறிவுறுத்துகின்றனர். சமீபத்தில் கொல்கத்தா குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரு குழந்தைக்கு இத்தகைய அரிதான மரபணு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.