கூகுள் குரோம் பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்தது கூகுள் நிறுவனம்

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கூகுள் குரோம் பயனர்களுக்கு ‘ஜீரோ-டே’ பாதுகாப்பு எச்சரிக்கையை கூகுள் நிறுவனம் விடுத்துள்ளது. உலாவியில் கண்டறியப்பட்ட இரண்டு மிக ஆபத்தான குறைபாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மென்பொருள் பாதுகாப்பில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதைத் தடுக்க இந்த உயர்மட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது பயனர்கள் ஹேக்கர்களின் நேரடி இலக்காக இருப்பதால், அவர்களின் ஆன்லைன் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆபத்தைத் தவிர்க்க, பயனர்கள் உடனடியாக கூகுள் குரோம் உலாவியைப் புதுப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பாதுகாப்பிற்காக ஆட்டோமேட்டிக் அப்டேட்டைச் செயல்படுத்துமாறும், மின்னஞ்சல்களில் வரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கூகுள் இந்த நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. பயனர்கள் தங்கள் கணக்குகளைத் தொடர்ந்து சரிபார்க்கவும், ஏதேனும் அசாதாரண மாற்றங்கள் தெரிந்தால் உடனடியாகப் புகாரளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.