கலிபோர்னியாவில் ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தக்கூடும் என எஃப்பிஐ அதிரடி எச்சரிக்கை

கலிபோர்னியாவில் ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தக்கூடும் என எஃப்பிஐ அதிரடி எச்சரிக்கை

மேற்காசிய நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் தற்போது அமெரிக்காவிற்கும் பரவியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பழிவாங்க கலிபோர்னியா கடற்கரை பகுதிகளில் ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எஃப்பிஐ எச்சரித்துள்ளது. பிப்ரவரி மாதம் முதல் இந்த ரகசிய சதித்திட்டம் தீட்டப்படுவதாக உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் குறித்த கூடுதல் விவரங்கள் இல்லாததால் அமெரிக்க பாதுகாப்பு முகமைகள் கவலையடைந்துள்ளன. இதற்கிடையில் மத்திய கிழக்கில் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க ஈரான் முயற்சித்து வருகிறது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுத்துள்ளதாக அண்டை நாடுகள் கூறியுள்ள நிலையில் இந்த மோதல் உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாட்டை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *