ஒரே நாளில் 20 ரூபாய் உயர்ந்த ஆட்டோ எல்பிஜி விலையால் வாழ்வாதாரம் பாதிப்பதாக ஓட்டுநர்கள் போராட்டம்
March 13, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் எதிரொலியால் சர்வதேச எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோயம்புத்தூரில் ஆட்டோ எல்பிஜி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கேஎன்ஜி புதூர் பகுதியில் உள்ள தனியார் நிலையத்தில் லிட்டருக்கு ஒரே நாளில் 20 ரூபாய் உயர்த்தப்பட்டு, 84.99 ரூபாய்க்கு விற்கப்படுவதால் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சர்வதேச நெருக்கடியைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்துவதாக ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சவாரி கட்டணத்தை உயர்த்த முடியாத சூழலில், இந்த திடீர் விலையேற்றம் தங்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிடும் என்பதால், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு விலையைக் கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.