ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வருகிறது

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வருகிறது

மத்திய நிதியமைச்சகம் 1961 ஆம் ஆண்டின் பழைய வரிச் சட்டத்திற்குப் பதிலாக 2025 ஆம் ஆண்டின் புதிய வருமான வரிச் சட்டத்தை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்துகிறது. வரி முறையை டிஜிட்டல் மயமாக்கி வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதே இதன் நோக்கம். வரி விகிதங்களில் மாற்றங்கள் இல்லை என்றாலும், தணிக்கை தேவையில்லாத வரி செலுத்துவோர் ஆகஸ்ட் 31 வரை வருமான வரி தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தில் நிலையான கழிவு (Standard Deduction) 75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதால், 12.75 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு கிடைக்கும். பழைய முறையில் முதலீட்டு சலுகைகள் தொடர்ந்தாலும், புதிய சட்டத்தில் அபராதங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கணக்கில் வராத பணத்திற்கு 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம். இந்த நவீன மாற்றங்கள் வரி செலுத்துவோருக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *