எஃப்.பி.ஐ திடுக்கிடும் தகவல்: கொலையாளி ராபின்சன், கிர்க்கிற்கு மிரட்டல் விடுத்தது அம்பலம்

சார்லி கிர்க்கைக் கொன்ற டைலர் ராபின்சன், கொலைக்கு முன் மிரட்டல் விடுத்ததுடன், கொலைக்குப் பின் குற்றத்தை ஒப்புக்கொண்டு செய்தி அனுப்பியதாக எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது. அமெரிக்க புலனாய்வுத் துறையின் (எஃப்.பி.ஐ) இயக்குநர் காஷ் படேல், கொலைக்கு முன் ராபின்சன் ஒரு குறிப்பை எழுதியதாகவும், அதில் கிர்க்கை “முடித்துவிடு”வதாகத் திட்டமிட்டதாகவும் கூறினார். அந்தக் குறிப்பு அழிக்கப்பட்டிருந்தாலும், தடயவியல் ஆதாரங்கள் அதன் இருப்பை உறுதிப்படுத்தியுள்ளன.
அதேபோல், கைது செய்யப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், ராபின்சன் தனது நண்பர்களுக்கு ஆன்லைன் தளத்தில் ஒரு செய்தியை அனுப்பி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். ராபின்சனின் டி.என்.ஏ., கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் ஸ்க்ரூ-டிரைவர் ஆகியவற்றில் இருந்து கிடைத்துள்ளது. தற்போது, அவர் உட்டா சிறையில் உள்ளார். விசாரணையில் அவர் ஒத்துழைக்கவில்லை.