உலகக்கோப்பை வென்ற உற்சாகம் 76 வயதில் நடனமாடி அசத்திய சுனில் கவாஸ்கர்

உலகக்கோப்பை வென்ற உற்சாகம் 76 வயதில் நடனமாடி அசத்திய சுனில் கவாஸ்கர்

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மாவின் அதிரடியால் 255 ரன்கள் குவித்த இந்தியா, பின்னர் பும்ராவின் அபார பந்துவீச்சால் நியூசிலாந்தை 159 ரன்களுக்கு சுருட்டியது. இதன் மூலம் சொந்த மண்ணில் கோப்பையைத் தக்கவைத்து இந்தியா வரலாறு படைத்தது.

இந்த வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து வர்ணனையாளர் அறையில் இருந்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த உற்சாகமாக நடனமாடினார். 76 வயதில் அவர் ஆடிய இந்த நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவருடன் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் கொண்டாட்டங்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *