உயிரற்ற உடல் மீண்டும் துடிப்பு, மயானத்தில் நடந்த அதிசயம்; 15 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் மரணம்
September 17, 2025

வாரணாசியில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்த 21 வயது இளைஞன், மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்டார். இறுதி சடங்குகளுக்காக அவரது உடல் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது, கங்கை நதியில் குளிப்பாட்டியபோது அவரது உடலில் அசைவு ஏற்பட்டது. இதைக்கண்டு அங்கிருந்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.
உடனடியாக அவர் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் 15 நிமிடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் இறந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதுடன், உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிகிச்சையில் ஏற்பட்ட அலட்சியமே இந்த விபரீதத்திற்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.