இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு? இந்திய டீசல் இறக்குமதிக்கு உக்ரைன் தடை

இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு? இந்திய டீசல் இறக்குமதிக்கு உக்ரைன் தடை

வரும் அக்டோபர் 1 முதல் இந்தியாவில் இருந்து டீசல் இறக்குமதிக்கு உக்ரைன் தடை விதிக்க உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்குவதால், ரஷ்யாவின் போருக்கு நிதி திரட்ட உதவுவதாக உக்ரைன் குற்றம் சாட்டுகிறது. இந்த நடவடிக்கை இரு நாடுகளின் வர்த்தக உறவுகளை பாதிக்கக்கூடும்.

சமீபத்தில் இந்திய டீசல் இறக்குமதியை உக்ரைன் அதிகரித்த போதிலும், தற்போது இறக்குமதி செய்யப்பட்ட இந்திய டீசலில் ரஷ்ய கலப்படங்கள் உள்ளதா என்பதை அறிய ஆய்வக சோதனைகள் நடத்த உக்ரைனின் பாதுகாப்பு முகமைகள் உத்தரவிட்டுள்ளன. ரஷ்யா-உக்ரைன் போரின் மத்தியில், இது ஒரு குறிப்பிடத்தக்க ராஜதந்திர மற்றும் பொருளாதார மாற்றமாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *