இந்தியாவிலேயே ஒரு இங்கிலீஷ் சேனல் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா

நியூஸ் டெஸ்க் : இந்தியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு சிறிய ஆறு ‘இந்தியாவின் இங்கிலீஷ் சேனல்’ என்று அழைக்கப்படுவது பலருக்கு ஆச்சரியமான தகவல். கேரளாவின் வயநாடு மலையில் உருவாகி அரபிக்கடலில் கலக்கும் இந்த மாஹே ஆறுதான் அந்தப் பெருமைக்குரியது. காலனித்துவ காலத்தில், இந்த ஆறு பிரிட்டிஷ் இந்தியாவிற்கும் பிரஞ்சு கட்டுப்பாட்டில் இருந்த மாஹே பகுதிக்கும் இடையே ஒரு இயற்கை எல்லையாக இருந்தது. ஐரோப்பாவில் பிரான்சையும் பிரிட்டனையும் இங்கிலீஷ் சேனல் பிரிப்பது போலவே, இங்கும் இந்த ஆறு செயல்பட்டதால் இதற்கு இப்பெயர் வந்தது.
வரலாற்று ரீதியாக மட்டுமின்றி, இன்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தில் இந்த ஆறு முக்கிய பங்கு வகிக்கிறது. மலையாள இலக்கியங்களில் புகழ் பெற்ற இந்த ஆறு, இப்பகுதி மக்களின் கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. குறிப்பாக மீன்பிடித் தொழில் மற்றும் சுற்றுலா மூலம் இது சாதாரண மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பழங்கால மசாலா வர்த்தகத்தின் மையமாக இருந்த இந்த நீர்நிலை, இன்றும் ஒரு வரலாற்றுச் சின்னமாகத் திகழ்கிறது.