இந்தியர்களுக்கு பொன்னான வாய்ப்பு! குடியுரிமை வழங்க முன்வந்த உலகிலேயே மகிழ்ச்சியான நாடு

இந்தியர்களுக்கு பொன்னான வாய்ப்பு! குடியுரிமை வழங்க முன்வந்த உலகிலேயே மகிழ்ச்சியான நாடு

உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றான ஃபின்லாந்து, நிரந்தரமாக வாழவும் வேலை செய்யவும் இந்தியர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது. அந்நாட்டின் புதிய கொள்கையின்படி, கடந்த நான்கு ஆண்டுகளாக அங்கு சட்டபூர்வமாக வசித்துவருபவர்கள் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். தற்போது ஃபின்லாந்தில் வசிக்கும் ஆனால் குடியுரிமை பெறாத 16,400 இந்தியர்களுக்கு இந்தச் செய்தி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த புதிய கொள்கையின் கீழ், குடியேறிகள் சிறந்த சுகாதார சேவைகள், கல்வி, வேலையின்மை உதவி, வீட்டு வசதி மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சமூக-பொருளாதார நன்மைகளைப் பெற முடியும். மேலும், இது அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் ஃபின்லாந்துக்கு அழைத்து வர அனுமதிக்கும். இந்த நடவடிக்கை இந்தியர்களுக்கு நீண்ட கால பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *