அமெரிக்க டாலர் வரலாற்றில் முதல்முறை அதிபர் ட்ரம்ப்பின் கையெழுத்து இடம்பெறுகிறது இதனால் 165 ஆண்டு கால பாரம்பரியம் முடிவுக்கு வருகிறது

அமெரிக்க டாலர் வரலாற்றில் முதல்முறை அதிபர் ட்ரம்ப்பின் கையெழுத்து இடம்பெறுகிறது இதனால் 165 ஆண்டு கால பாரம்பரியம் முடிவுக்கு வருகிறது

அமெரிக்காவின் 250வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் அந்நாட்டு கரன்சி நோட்டுகளில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கையெழுத்து இடம்பெறவுள்ளது. 1861 ஆம் ஆண்டு முதல் கருவூலச் செயலாளர்கள் மட்டுமே கையெழுத்திட்டு வந்த 165 ஆண்டு கால நடைமுறை இதன் மூலம் மாற்றியமைக்கப்படுகிறது. அமெரிக்க வரலாற்றிலேயே பதவியில் இருக்கும் ஒரு அதிபரின் கையெழுத்து டாலர் நோட்டுகளில் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த மாற்றம் அனைத்து நோட்டுகளிலும் இருக்குமா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. இருப்பினும், அமெரிக்க பொருளாதார மறுமலர்ச்சியின் அடையாளமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. இந்த புதிய வடிவமைப்பிலான நோட்டுகள் எதிர்காலத்தில் சேகரிப்பாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *