அமெரிக்க டாலர் நோட்டுகளில் 165 ஆண்டு கால நடைமுறையை மாற்றி டொனால்ட் டிரம்ப் புதிய வரலாறு

அமெரிக்க டாலர் நோட்டுகளில் நிலவி வந்த 165 ஆண்டு கால பாரம்பரியத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக மாற்றியுள்ளார். இனி டாலர் நோட்டுகளில் கருவூல அதிகாரியின் கையெழுத்திற்குப் பதில் அதிபரின் கையெழுத்து இடம்பெறும். அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் சாதனைகளையும் டிரம்பின் பங்களிப்பையும் கௌரவிக்கும் வகையில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரும் ஜூன் மாதம் முதல் டிரம்பின் கையெழுத்து பொறிக்கப்பட்ட புதிய 100 டாலர் நோட்டுகள் அச்சடிக்கப்பட உள்ளன. அத்துடன் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டிரம்பின் உருவம் பதித்த 24 காரட் தங்க நாணயங்களும் வெளியிடப்படவுள்ளன. தற்போதுள்ள ஜோ பைடன் காலத்து அதிகாரிகளின் கையெழுத்துகளுக்குப் பதிலாக, புதிய நோட்டுகளில் அதிபர் மற்றும் வருவாய் செயலாளரின் கையெழுத்துகள் மட்டுமே இனி இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.