அமெரிக்காவின் வாசலில் கியூபாவின் புதிய வியூகம் டிரம்ப்பை நிலைகுலைய வைக்குமா
March 27, 2026

ஈரான் போர்ப் பதற்றத்திற்கு மத்தியில், கியூபாவின் அரசியல் மாற்றங்கள் வாஷிங்டனுக்குப் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளன. ரவுல் காஸ்ட்ரோவின் பேரன் ரோட்ரிக்ஸ் காஸ்ட்ரோ, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் நடத்தியுள்ள ரகசியப் பேச்சுவார்த்தை, கியூபாவின் தற்போதைய அரசாங்கத்தைத் தாண்டி ஒரு புதிய அதிகார மையத்தை உருவாக்கியுள்ளது.
கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ள கியூபாவை மீட்க, காஸ்ட்ரோ வாரிசு அமெரிக்காவுடன் சமரசத்திற்கு முயல்வதாகத் தெரிகிறது. இருப்பினும், கியூப கம்யூனிச ஆட்சியை வீழ்த்த நினைக்கும் அமெரிக்காவிற்கு இந்த ‘நண்டு’ ராஜதந்திரம் பின்னடைவாக அமையுமா என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.