அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு அதிரடியாக கழற்றிவிடப்பட்ட 20 சிட்டிங் எம்எல்ஏக்கள்

அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு அதிரடியாக கழற்றிவிடப்பட்ட 20 சிட்டிங் எம்எல்ஏக்கள்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக தனது 127 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாம் கட்டப் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஐந்துமுனைப் போட்டி நிலவும் சூழலில், பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த வேட்பாளர் தேர்வில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டுள்ளார்.

இந்த பட்டியலில் தற்போதைய 20 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முதற்கட்டப் பட்டியலில் 20 முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது புதிய வியூகங்களுடன் அதிமுக களம் காண்கிறது. ஸ்ரீரங்கம், பண்ருட்டி உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *