அகமதாபாத் விமான விபத்து, கேப்டன் தானே எரிபொருள் விநியோகத்தை நிறுத்தினார்?
July 17, 2025

ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமான விபத்துக்குப் பிறகு, அமெரிக்க ஊடகங்கள் இந்திய விமானியை குறிவைக்கின்றன. தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் அறிக்கையின்படி, காக்பிட் பதிவுகள், விமானத்தின் கேப்டன் சுமித் சபர்வாலே விமானத்தின் என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்தினார் என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், விமான விபத்து விசாரணை பணியகத்தின் (AAIB) ஆரம்ப அறிக்கையில் அத்தகைய கூற்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த விபத்துக்குப் பிறகு போயிங் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளதால், அமெரிக்க ஊடகங்கள் இந்திய விமானிகள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளன. அரசு வட்டாரங்கள் இந்த அறிக்கையை மறுத்துள்ளன.