ரூ.50,000 ஹேர் ட்ரையர் வாங்கிய மகள், தாயின் ரியாக்ஷன் இணையத்தில் வைரல்
September 16, 2025

சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது, அதில் ஒரு மகள் தனது தாயிடம் ரூ.50,000 மதிப்புள்ள விலையுயர்ந்த டைசன் ஹேர் ட்ரையரை காட்டுகிறார். அந்த சாதனத்தின் விலையைக் கேட்டதும், தாயின் எதிர்வினை பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது. இந்த வீடியோ இணைய பயனர்களிடையே நகைச்சுவை மீம்களையும் கருத்துக்களையும் உருவாக்குகியுள்ளது.
வீடியோவில், மகள் மகிழ்ச்சியுடன் தனது புதிய ஹேர் ட்ரையரை அன் பாக்ஸ் செய்து கொண்டிருந்தபோது, தாய் அதன் விலையைக் கேட்கிறார். விலை ரூ.50,000 என்று கேட்டதும், தாய் உடனடியாக நகைச்சுவையாக, “தலைக்கு முடி இல்லை, அதை உலர்த்த இவ்வளவு விலை ட்ரையர் வாங்கினாயா?” என்று கூறினார். இந்த வேடிக்கையான பதில், சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கான லைக்ஸ்களையும் கருத்துக்களையும் பெற்றுள்ளது.