மரணத்தின் கடைசி நிமிடங்களில் மனித மூளையில் என்ன நடக்கிறது? அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளியிட்ட ஆய்வு

மரணத்தின் இறுதி தருணங்களில் மனித மூளையின் செயல்பாடு குறித்து சமீபத்திய அறிவியல் ஆய்வு ஒன்று சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளது. ஆய்வின்படி, வாழ்வின் முடிவில் மூளை அதன் நேர்மறையான நினைவுகளை (positive memories) அல்லது நல்ல தருணங்களை நினைவுபடுத்தத் தொடங்குகிறது. கால்-கை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 87 வயது நோயாளிக்கு சிகிச்சையின்போது, எதிர்பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தபோது, அவரது மூளையின் ஈஇஜி (EEG) பதிவு செய்யப்பட்டது. இது இறப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முந்தைய அவரது எண்ணங்களைப் பதிவு செய்தது.
லூயிஸ்வில் ஜெம்மர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில், நோயாளி இறப்பதற்கு 30 வினாடிகளுக்கு முன் அவரது இதயத் துடிப்பு மிக வேகமாக அதிகரித்ததாகவும், மூளையில் ‘காமா அலைகள்’ (Gamma Oscillations) எனப்படும் ஒரு தனித்துவமான அலை பதிவானதாகவும் கண்டறியப்பட்டது. அதிக காமா அலையின் செயல்பாட்டினால் தான் அந்த நபர் தனது நல்ல நினைவுகளை நினைவுகூர்ந்தார் என்று நரம்பியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உடல் செயலிழந்த நிலையிலும், கடைசி தருணத்தில் மூளை கனவு காணும் நிலைக்குச் சென்று தீவிரமாகச் செயல்படுகிறது என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.