பாஜக எம்எல்ஏவின் சர்ச்சைக்குரிய பேச்சு: ‘3 குழந்தைகளின் தாய்மார்களும் 120 வேகத்தில் ஓடி விடுகிறார்கள்’

பாஜக எம்எல்ஏவின் சர்ச்சைக்குரிய பேச்சு: ‘3 குழந்தைகளின் தாய்மார்களும் 120 வேகத்தில் ஓடி விடுகிறார்கள்’

ராஜஸ்தான் மாநிலம் ஓசியான் தொகுதி பாஜக எம்எல்ஏ பைராராம் சியோல், சிறுமிகள் மற்றும் திருமணமான பெண்கள் காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார். வெறும் சிறுமிகள் மட்டுமன்றி, “மூன்று குழந்தைகளின் தாய்மார்களும் 120 வேகத்தில் ஓடி விடுகிறார்கள்” என்று அவர் கூறினார். இத்தகைய சம்பவங்கள் சமூகத்திற்கும், கலாச்சாரத்திற்கும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அவர் வேதனை தெரிவித்தார்.

புதிய தலைமுறையினர் மொபைல் போன்களால் திசை திரும்புவதாகக் குற்றம்சாட்டிய அவர், கல்வி மற்றும் நன்னெறிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், இந்து திருமணச் சட்டம், 1955-ல் திருத்தம் கொண்டு வந்து, திருமணத்திற்கு முன் பெற்றோர் சம்மதத்தை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அவர் சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *