நேபாள இடைக்கால பிரதமர் சுஷிலா கார்க்கிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த Gen-Z!

நேபாள இடைக்கால பிரதமர் சுஷிலா கார்க்கிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த Gen-Z!

நேபாளத்தில் கெபி ஷர்மா ஒலி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு தலைமை வகித்த Gen-Z அமைப்பினர், தற்போது இடைக்கால பிரதமர் சுஷிலா கார்க்கிக்கு எதிராக போராட்டங்களை தொடங்கியுள்ளனர். கார்க்கி தன்னிச்சையாக அமைச்சரவையை அமைத்ததாக குற்றம் சாட்டியுள்ள அவர்கள், அவரை உடனடியாக பதவி விலக கோரியுள்ளனர்.

உள்துறை அமைச்சராக ஓம் பிரகாஷ் ஆர்யால் நியமிக்கப்பட்டதற்கே இந்த எதிர்ப்பு வலுத்துள்ளது. ஒரு ‘வெளிப்புற’ நபரை ஏன் இவ்வளவு முக்கிய பதவிக்கு நியமிக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். Gen-Z தலைவர் சுதன் குருங், பிரதமர் கார்க்கிக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்து, “உங்களை எங்களால் பிரதமராக்க முடிந்தால், உங்களையும் உங்கள் தலைவர்களையும் பதவியிலிருந்து அகற்ற அதிக காலம் ஆகாது” என்று கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *