தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளில் பொது விடுமுறை அறிவிப்பு
March 27, 2026

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 23ஆம் தேதி பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக, அதிமுக உள்ளிட்ட கூட்டணிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய்யின் வேட்பாளர் பட்டியல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கேயும் அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.