உயிரோடு இருந்தால் சரணடையுங்கள் மோஜ்தபா காமேனிக்கு டிரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கை

உயிரோடு இருந்தால் சரணடையுங்கள் மோஜ்தபா காமேனிக்கு டிரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கை

ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா காமேனி பொதுவெளியில் தோன்றாத நிலையில், அவர் உயிருடன் இருக்கிறாரா என்ற கேள்வியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எழுப்பியுள்ளார். ஒருவேளை அவர் உயிருடன் இருந்தால், ஈரானைக் காப்பாற்ற சரணடைவதே ஒரே வழி என்று டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். இந்த அதிரடி கருத்து சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் போர் பதற்றத்தையும் அதிகரித்துள்ளது.

ஈரானின் பொருளாதார மையமான கார்க் தீவில் உள்ள 90-க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகளை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளதை டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தால் அடுத்த இலக்கு எண்ணெய் கிணறுகளாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். அமைதி திரும்ப வேண்டுமானால் ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை முழுமையாகக் கைவிட்டு முறையான ஒப்பந்தத்திற்கு வர வேண்டும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *