இந்திய வான்பரப்பை பாதுகாக்கும் மெகா திட்டம் மற்றும் எஸ் 400 பிரம்மாஸ் ஏவுகணைகள் குறித்து முக்கிய முடிவு
March 27, 2026

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடைபெறும் பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் கூட்டத்தில் ராணுவ பலத்தை அதிகரிக்க முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இதில் ஐந்து கூடுதல் எஸ்-400 சுதர்சன் அமைப்புகள், அதிக அளவிலான பிரம்மாஸ் ஏவுகணைகள் மற்றும் நடுத்தர போக்குவரத்து விமானங்களை வாங்குவதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போர் ட்ரோன்கள் மற்றும் தனுஷ் ஹோவிட்சர் பீரங்கிகளை இணைப்பதும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். ‘புராஜெக்ட் குஷா’ மூலம் வான் பாதுகாப்பை பலப்படுத்துவதும், இறக்குமதியை குறைத்து ராணுவத்தின் தாக்குதல் திறனை மேம்படுத்துவதே இந்த மெகா திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.