அடுத்த 96 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

அடுத்த 96 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த சில நாட்களுக்கு பல மாநிலங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. வட, கிழக்கு, வடகிழக்கு, மத்திய மற்றும் தென் இந்திய மாநிலங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளன.

மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், தமிழ்நாடு மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசத்திலும் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. பருவமழை முடிவடையும் நிலையில் இந்த மழைப்பொழிவு இயல்பானது என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *