வேறொருவருடன் உல்லாசமாக இருந்த மனைவி; சாதகமாக்கிக் கொண்ட போலீஸ்காரர்; பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கி பணம் சம்பாதிக்கத் திட்டம்!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் கட்டிடத் தொழிலாளி ஒருவரும், அவரது 35 வயது மனைவியும் வசித்து வருகிறார்கள்.
இதில், அந்தக் கட்டிடத் தொழிலாளி தன் மனைவிக்குப் பணத்தாசையைக் காண்பித்து வேறு நபர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். முதலில் அந்தப் பெண் மறுத்த நிலையில், அவரது கணவர் தொடர்ந்து வற்புறுத்தியதால், அந்தப் பெண்ணும் வேறு நபர்களுடன் உல்லாசமாக இருந்தார்.
இதனை கணவன், அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து பின்னர் மிரட்டியுள்ளார். இந்த வீடியோவைக் காண்பித்து அவர் தன் மனைவியைத் திட்டி, தகாத வார்த்தைகளால் அடித்துத் துன்புறுத்திய நிலையில், அவரது தொல்லையைத் தாங்க முடியாமல், அந்தப் பெண் தனக்குத் தெரிந்த போலீஸ்காரரான சந்திர நாயக் என்பவரிடம் இது பற்றித் கூறியுள்ளார்.
பின்னர், அந்த போலீஸ்காரர் பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவரது கணவனின் செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்களை அழித்தார். பின்னர், அந்த போலீஸ்காரர் பெண்ணுடன் பலமுறை உல்லாசமாக இருந்த நிலையில், அவரும் வேறு நபர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அந்தப் பெண்ணின் கணவன் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்த நிலையில், பணத்தேவைக்காகத் தன் மனைவியை விபச்சாரத்தில் ஈடுபட வைத்து அதன்மூலம் பணம் சம்பாதிக்க முடிவு செய்தது தெரியவந்தது.
இதில் விருப்பமில்லாத மனைவி போலீஸ்காரரிடம் தெரிவிக்க, அவரும் அந்தப் பெண்ணை வைத்து பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்திர நாயக் மற்றும் அந்தப் பெண்ணின் கணவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.