ஹோர்முஸ் நீரிணையை கடந்து குஜராத் வந்தடைந்தது 45 ஆயிரம் மெட்ரிக் டன் எல்பிஜி கப்பல்
March 16, 2026

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்திற்கு மத்தியில் 45,000 மெட்ரிக் டன் எல்பிஜி சிலிண்டர் எரிவாயுவுடன் ‘சிவாலிக்’ கப்பல் இன்று குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்தது. சர்வதேச அளவில் எரிபொருள் வணிகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை வழியாக வர ஈரானிடம் சிறப்பு அனுமதி பெற்று இக்கப்பல் இந்தியா வந்துள்ளது.
இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் இந்த வருகை பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இந்தியா வர வேண்டிய ‘சிவாலிக்’ மற்றும் ‘நந்தா தேவி’ ஆகிய இரு கப்பல்களுக்கும் ஈரான் அனுமதி அளித்திருந்த நிலையில் முதற்கட்டமாக இந்த சரக்கு வந்து சேர்ந்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் நிலவும் கேஸ் தட்டுப்பாடு விரைவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.