ஹோர்முஸ் நீரிணைக்கு போர்க்கப்பல்களை அனுப்புங்கள் உலக நாடுகளுக்கு டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அதிரடி அழைப்பு
March 15, 2026

மேற்காசியப் போர்ச் சூழலில் ஈரான் விதித்துள்ள தடைகளால் உலகளாவிய எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை முறியடிக்கவும் சர்வதேச கடல்வழிப் பாதையைப் பாதுகாக்கவும் ஹோர்முஸ் நீரிணைக்கு அந்தந்த நாடுகள் தங்களது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட ட்ரம்ப், ஈரானின் நடவடிக்கைகளால் உலகப் பொருளாதாரம் சிதைவதைத் தடுக்க இந்த ஒருங்கிணைந்த பாதுகாப்பு அவசியம் எனத் தெரிவித்தார். சர்வதேச எண்ணெய் வர்த்தகத்தை உறுதிப்படுத்த உலக நாடுகள் முன்வர வேண்டும் என்பதே அவரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.