ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்த நேட்டோ நாடுகள்

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்த நேட்டோ நாடுகள்

ஈரானால் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 104 டாலரை தாண்டியுள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க நேட்டோ நாடுகள் தங்கள் நாட்டு போர்க்கப்பல்களை பாதுகாப்பு பணிக்கு அனுப்ப வேண்டும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். தவறும் பட்சத்தில் நேட்டோ அமைப்பின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும் பிரான்ஸ், ஜப்பான் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் தற்போதைக்கு கப்பல்களை அனுப்ப முடியாது என பின்வாங்கியுள்ளன. சீனாவுக்கும் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் ஈரான் தரப்போ யாரிடமும் போர் நிறுத்தம் கோரப்போவதில்லை என ஆவேசமாக தெரிவித்துள்ளது. இந்த மோதல் போக்கு உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *