ஷேக் ஹசீனாவின் லாக்கரில் 9.7 கிலோ தங்கம் கைப்பற்றுதல் இடைக்கால அரசு நடவடிக்கை

ஷேக் ஹசீனாவின் லாக்கரில் 9.7 கிலோ தங்கம் கைப்பற்றுதல் இடைக்கால அரசு நடவடிக்கை

சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை வங்கதேச இடைக்கால அரசு தொடங்கியுள்ளது. தேசிய வருவாய் வாரியத்தின் (NBR) மத்திய புலனாய்வுப் பிரிவினர், மோதிஜீலில் உள்ள அக்ரானி வங்கியின் பிரதான கிளையில் ஷேக் ஹசீனாவின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த இரண்டு லாக்கர்களில் இருந்து 832.51 போரி (9.704 கிலோகிராம்) தங்க நகைகளை மீட்டனர்.

திங்களன்று அதிகாரிகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது, லாக்கர் எண்கள் 751 மற்றும் 753-ல் இருந்து தங்க நகைகளுடன், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெற்ற விருதுகள் மற்றும் பரிசுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ‘தி டெய்லி ஸ்டார்’ அறிக்கையின்படி, விதிகளைப் பின்பற்றி லாக்கர்கள் திறக்கப்பட்டன. பூபாலி வங்கியில் உள்ள அவரது பெயரில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு லாக்கரில் எந்தவொரு சொத்தும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். போரி என்பது தங்கத்தை அளவிடும் பாரம்பரிய அலகு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *