வெள்ளை பந்து பிங்க் நிறமாக மாறிய வினோதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் அரங்கேறிய கூத்து
March 27, 2026

லாகூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய பிஎஸ்எல் போட்டியின் போது வீரர்களின் ஜெர்சியில் இருந்த சாயம் ஒட்டியதால் வெள்ளை பந்து பிங்க் நிறமாக மாறியது. தரமற்ற ஜெர்சி மற்றும் இந்த வினோத சம்பவத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் “உலகின் முதல் பிங்க் பால் டி20” என்று கடுமையாக கிண்டலடித்து வருகின்றனர்.
பாகிஸ்தானில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டால் இத்தொடர் வெறும் இரண்டு நகரங்களுக்குள் சுருக்கப்பட்டுள்ளது. தொடக்க விழா ரத்து மற்றும் காலி மைதானத்தில் போட்டிகள் நடப்பதால் விரக்தியடைந்த ரசிகர்கள், இதனை “பெட்ரோல் தட்டுப்பாடு லீக்” என்று விமர்சித்து வைரலாக்கி வருகின்றனர்.