வெள்ளை பந்து திடீரென இளஞ்சிவப்பு நிறமாக மாறியதால் பிஎஸ்எல் தொடரின் முதல் போட்டியிலேயே பாகிஸ்தானுக்கு நேர்ந்த அவமானம்

வெள்ளை பந்து திடீரென இளஞ்சிவப்பு நிறமாக மாறியதால் பிஎஸ்எல் தொடரின் முதல் போட்டியிலேயே பாகிஸ்தானுக்கு நேர்ந்த அவமானம்

லாகூர் கடாபி மைதானத்தில் ஹைதராபாத் கிங்ஸ்மேன் மற்றும் லாகூர் கலாண்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் விசித்திரமான சம்பவம் நடந்தது. ஹைதராபாத் வீரர்கள் பந்தைத் தேய்த்தபோது அவர்களின் ஜெர்சியின் நிறம் ஒட்டிக்கொண்டு வெள்ளை பந்து இளஞ்சிவப்பு நிறமாக மாறியது. இந்த தரம் குறைந்த உடைகளால் உலக கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தான் லீக் பெரும் கேலிக்கு உள்ளானது.

இந்த குழப்பங்களுக்கு மத்தியில் முதலில் ஆடிய லாகூர் அணி பஹர் ஜமானின் அதிரடியில் 199 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணி வெறும் 130 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் தலைமையிலான ஹைதராபாத் அணி முதல் போட்டியிலேயே படுதோல்வியைச் சந்தித்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *