வெள்ளிமலையில் வெறும் 5 வாக்காளர்களுக்காக அமையும் வாக்குச்சாவடி தேர்தல் ஆணையத்தின் அசத்தல் நடவடிக்கை
March 16, 2026

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியான வெள்ளிமலையில், வெறும் ஐந்து வாக்காளர்களுக்காக ஒரு தனி வாக்குச்சாவடியை இந்திய தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. சாலை வசதியற்ற கடினமான மலைப்பாதையைக் கடந்து சென்று, ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தை நிலைநாட்டும் இந்த முயற்சியை தலைமை தேர்தல் ஆணையர் ஜனநாயகத் திருவிழாவின் மகுடம் என்று வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
ஆண்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட இந்த எஸ்டேட் பகுதியில் செந்தில், ஜெயராணி உட்பட ஐந்து பேர் மட்டுமே இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ளனர். அங்குள்ள துரைச்சாமி மரகதம் தொடக்கப்பள்ளியில் தேர்தல் பணிக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஒரு வாக்கு கூட வீணாகக் கூடாது என்ற உயரிய நோக்கில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.